ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' மும்முரம்... பயங்கரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச்சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஏப்.,22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கையால், கேலர் மற்றும் நடர் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரறுக்கும் பணிகள் தொடர்ந்து முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 'ஆபரேஷன் த்ராஷி' என்ற பெயரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
3 அல்லது 4 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராணுவத்தின் ஒரு பிரிவான வெள்ளை நைட் படைப்பிரிவு விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், "பயங்கரவாதிகளுக்கு எதிராக 'ஆபரேஷன் த்ராஷி' என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் போலீசாருடன் உடனான பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை வீழ்த்தும் பணி தொடர்ந்து வருகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!
-
'ஆபரேஷன் சிந்தூர் ஏன்: யுஏஇ., அரசிடம் விளக்கிய இந்திய எம்.பி.,க்கள் குழு!
-
உத்தரபிரதேசத்தில் கொட்டியது கனமழை; கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு
-
மே 24,25,26 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு!
-
தமிழகத்தில் பறவைகள் பல விதம்; கணக்கெடுப்பில் சுவாரஸ்ய தகவல்!
-
தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்