காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு

8


புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரியில் 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.


டில்லியில் காவிரிமேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவில், ஜூன் மாதத்திற்கான பங்கு 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி தண்ணீரை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திறந்து விட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement