5 கிலோ கஞ்சா பறிமுதல்

பூந்தமல்லி பூந்தமல்லி, கரையான்சாவடி பேருந்து நிறுத்தத்தில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் நேற்று,கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் மகோடோ, 22, என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவரிடம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சுமித் மகோடோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement