பலத்த காற்றினால் இலை வாழை பாதிப்பு

உடுமலை : உடுமலை பகுதியில், இலை வாழை சாகுபடி பரப்பு அதிகரித்து வரும் நிலையில், பலத்தகாற்றினால், நடப்பு சீசனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை ஏழு குள பாசன பகுதி மற்றும் நீர் வளம் அதிகமுள்ள பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்கின்றனர்.
கதளி, பூவன், நேந்திரன் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு, விற்பனைக்காக கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இலை வாழை ரகம் சாகுபடியிலும் உடுமலை பகுதியில், ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
உணவு பொருட்களை பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்ய அரசு தடை விதித்த பிறகு, இலை வாழைக்கு தேவை அதிகரித்தது.
விவசாயிகள் கூறுகையில், 'இலை வாழையில், கன்று நட்டு ஏழாம் மாதம் முதல் தொடர்ந்து, 24 மாதங்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் இலை அறுவடை செய்யலாம். பூவன் வாழை இலைக்கு நல்ல விலை கிடைக்கிறது. நடப்பு சீசனில் பலத்த காற்று காரணமாக, இலைகள் கிழிந்து, அறுவடை பாதித்துள்ளது,' என்றனர்.
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்