பாரம்பரிய விதை திருவிழா விழுப்புரத்தில் இன்று துவக்கம்
விழுப்புரம் : பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் இயற்கை அரிசி மற்றும் பாரம்பரிய விதை திருவிழா இன்று துவங்குகிறது.
விழுப்புரம் ஜெயசக்தி திருமண மண்டபத்தில், இன்று 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
இதில், 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறிகள், விதைகள் கண்காட்சி மற்றும் தினமும் 7 வகை பாரம்பரிய அரிசியில் சமைக்கப்பட்ட உணவு திருவிழா மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை நடக்கிறது.
காலை 10:30 மணி முதல் மாலை வரை நடக்கும் கருத்தரங்கில் முன்னோடி விவசாயிகளின் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement