திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

திருப்பூர், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் கயல்விழி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சக்ரபாணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.

இதில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது; தேர்தல் பணிக்கு தயார்படுத்துவது; கட்சி வளர்ச்சி, புதிய உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பிரசாரத்துக்கான யுக்திகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை குறித்து விவாதித்து, நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Advertisement