பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை

1

வேலூர்'; வேலூரில் பேசாமல் இருந்ததால் தமது காதலியை அடித்துக் கொன்ற காதலன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதுபற்றிய விவரம் வருமாறு;


சின்னா அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சபீனாபானு(33) என்பவர் விவாகரத்து ஆனவர். தமது பெற்றோருடன் வசித்து வந்த அவர், சதுப்பேரியில் உள்ள காலணி தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வந்தார்.


அதே ஆலையில் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்(35) என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்.


ஆனால் 6 மாதங்களாக வேலைக்கு சுரேஷ் செல்லாமல் இருந்ததால் அவருடன் பேசுவதை சபீனாபானு தவிர்த்ததாக தெரிகிறது. பலமுறை முயன்றும் அதற்கு பலனில்லாமல் போனது.


இந்நிலையில், சம்பவத்தன்று சபீனாபானு வீட்டுக்குச் சென்ற சுரேஷ், தம்மிடம் பேசாமல் இருப்பது ஏன் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தாம் மறைத்து வைத்திருந்த கம்பியை கொண்டு சபீனாபானுவை தாக்கி உள்ளார்.


பலத்த காயம் அடைந்த அவர், தப்பித்து ஓட முயற்சித்தும் துரத்திச் சென்று தாக்கி இருக்கிறார். இதில் சபீனாபானு இறந்துவிட, சுரேஷ் தப்பிச்சென்று விட்டார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், சுரேஷ் வீட்டுக்கு சென்ற போது, அங்குள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement