தேவராயபுரத்தில் 17ஆண்டுக்கு பிறகு நடந்த பாலாயி அம்மன் கோவில் விழா
.
எருமப்பட்டி, எருமப்பட்டி அருகே தேவராயபுரத்தில், 17 ஆண்டு
களுக்கு பிறகு, பாலாயி அம்மன் கோவில் திருவிழாவிற்காக, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
எருமப்பட்டி யூனியன், தேவராயபுரத்தில் பாலாயி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்
துறைக்கு சொந்தமான கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 17ஆண்டுகளாக விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஊர் மக்கள் ஒன்று கூடி, திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் படி, திருவிழா நடத்துவதற்காக, நேற்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் மோகனுார் காவேரி ஆற்றில் இருந்தும், புலியஞ்
சோலையில் இருந்தும்
தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.
இன்று மாலை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சக்தி அழைத்தலும், 24ல் முனியப்பன் வீதி உலா பூஜை, 28ல் பாலாயி அம்மன் தேர்திருவிழா மற்றும் மாவிளக்கு பூஜை நடக்க உள்ளது.