நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்!

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் 'நிடி ஆயோக்' கூட்டம், நாளை (மே 24) டில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) காலை 9.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் முக்கிய பிரமுகர்களை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்; கூட்டம் முடிந்து, அன்றே சென்னை திரும்புகிறார்.
இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.










மேலும்
-
வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் தடை: கோர்ட் படியேறிய ஹார்வார்டு பல்கலை.
-
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
-
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி
-
பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை
-
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு