பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்தி பரப்பும் காங்கிரஸ்; பா.ஜ., குற்றச்சாட்டு

புதுடில்லி: காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது என்று பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்," எனப் பேசினார்.
அவரது இந்தப் பேச்சை விமர்சித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், இந்தியாவின் கவுரவத்தில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், டிரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்? என்றும், கேமராக்களுக்கு முன்பு மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? என்றும் கேட்டிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு பா.ஜ.,வினரை கொதிப்படையச் செய்துள்ளது.
ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விடுத்த எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது; இறுதியாக பிரதமர் மோடியின் உரையை நீங்கள் பார்த்திருப்பது தற்போது தெரிகிறது. இதற்காக நீங்கள் 10 நாட்கள் எடுத்துக் கொண்டாலும், இது நல்ல விஷயம் தான். உங்கள் கட்சி கடந்த காலங்களில் செய்து கொண்டிருந்ததைப் போல, மோடி அரசு காதல் கடிதத்தை ஒன்று அனுப்பவில்லை. வலிமையான பதிலடியை கொடுத்துள்ளோம், எனக் கூறினார்.
அதேபோல, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதாப் பந்தாரி வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், காங்கிரஸ் இன்று பாகிஸ்தானுக்கு ஆதரவான போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
வாசகர் கருத்து (19)
Balasubramanian - ,
23 மே,2025 - 19:57 Report Abuse

0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
23 மே,2025 - 17:57 Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
23 மே,2025 - 15:36 Report Abuse

0
0
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
23 மே,2025 - 17:07Report Abuse

0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23 மே,2025 - 14:48 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
23 மே,2025 - 14:28 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
23 மே,2025 - 13:37 Report Abuse

0
0
Reply
முருகன் - ,
23 மே,2025 - 13:29 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
23 மே,2025 - 14:16Report Abuse

0
0
Arjun - ,இந்தியா
23 மே,2025 - 15:17Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
23 மே,2025 - 13:25 Report Abuse

0
0
Reply
RAJ - dammam,இந்தியா
23 மே,2025 - 13:10 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
23 மே,2025 - 12:51 Report Abuse

0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
-
கோடாவில் மாணவர்கள் தற்கொலை ஏன்: சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் தடை: கோர்ட் படியேறிய ஹார்வார்டு பல்கலை.
-
மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'
-
பீஹாரில் கடும் மின்தடை; மொபைல்போன் வெளிச்சத்தில் தேர்வெழுதிய மாணவர்கள்
Advertisement
Advertisement