ஆண் குழந்தை தத்து கொடுக்க கலெக்டர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே கண்டறியப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை தொடர்பாக ஆட்சேபனை இல்லையெனில் தத்து கொடுக்கப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் கடந்த, 1ம் தேதி அடைக்கல அன்னை தேர் திருவிழாவின் போது பச்சிளம் ஆண் குழந்தை கண்டறியப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தைக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டி உள்ளதால், குழந்தை நலக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு குழந்தைக்கு ரூபன்ராஜ் என்று பெரியிடப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு ெஹல்ப்பிங் ஹார்ட்ஸ் சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு உரிமை கோருபவர் இருப்பின், 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.
மேலும் 04151-225600 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஆட்சேபனை எதுவும் இல்லாத பட்சத்தில் தத்து கேட்டு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு குழந்தை சட்டப்படி தத்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அமெரிக்கர்களிடம் தினமும் ரூ.25 லட்சம் மோசடி: புனேயில் போலி கால்சென்டர் மூடல்; 5 பேர் கைது
-
முடங்கியது எக்ஸ் தளம்; பயனர்கள் கடும் அவதி
-
டில்லி அணி பவுலிங்; முதலிடத்திற்கு முன்னேறுமா பஞ்சாப்?
-
பயங்கரவாதத்தால் இந்தியாவை ஒடுக்க முடியாது: காங்., எம்.பி., சசி தரூர்
-
பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது என்ன: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
பாக்., செயலால் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு: மத்திய வெளியுறவு அமைச்சகம்