மகரிஷி பள்ளிக்கு சேர்மன் பாராட்டு

நெய்வேலி : நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் சாதனை படைத்ததற்கு என்.எல்.சி., சேர்மன் பாராட்டு தெரிவித்தார்.

நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி முதல்வர், நெய்வேலி மகரிஷி பள்ளி நிர்வாகத்தை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பாராட்டி கவுரவித்தார்.

Advertisement