இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு


புதுடில்லி: இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அணியில் தமிழக வீரர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.


இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20-ஆக.4) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் (லீட்ஸ்), ஜூன் 20ல் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

டெஸ்டில் இருந்து அனுபவ ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணி மாற்றத்தை நோக்கி நகர்ந்தது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. அணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விபரம் பின்வருமாறு:

சுப்மன் கில் (கேப்டன்),

ரிஷாப் பன்ட்

ஜெய்ஸ்வால்,

ராகுல்,

சாய் சுதர்சன் (தமிழக வீரர்)

கருண் நாயர்,

நிதிஷ் குமார்,



ரவிந்திர ஜடேஜா,


துருவ் ஜுரல்,


வாஷிங்டன் சுந்தர் (தமிழக வீரர்)


ஷர்துல் தாகூர்


பும்ரா


சிராஜ்,


பிரசித் கிருஷ்ணா


ஆகாஷ் தீப்,


அர்ஷ்தீப் சிங்,


குல்தீப் யாதவ்,

Advertisement