சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம்: சேலம் அருகே மூதாட்டியை கொன்று நகை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சின்னேரி காட்டில் 70 வயது மூதாட்டி சரஸ்வதி என்பவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். கடந்த 20ம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ந்த டி.ஐ.ஜி., உமா மகேஸ்வரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர் விசாரணையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் தொடர் விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய நபரை சேலம் மாவட்டம் சங்ககிரியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
அந்த வாலிபர் பெயர் நரேஷ் குமார் வயது 25. ஓமலூர் அருகே கட்டிகாரன் ஊரை சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு பகுதியில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது.



மேலும்
-
ராகுலுக்கு சிக்கல்: ஜாமினில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்த ஜார்க்கண்ட் கோர்ட்
-
இந்திய அணிக்கு புதிய கேப்டன் சுப்மன் கில்; அணியில் தமிழர்கள் இருவருக்கு வாய்ப்பு
-
பஞ்சாயத்துகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை வாபஸ் பெற வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
இன்று ஆரஞ்சு, நாளை ரெட் அலர்ட்; பருவமழை குறித்து முழு விபரம் இதோ!
-
எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை