கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!

மேட்டூர்: கர்நாடகா காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் காரத்தன்மை அதிகமாக இருப்பதால், மீன்கள் ஓடைகள் வழியாக வெளியேறி வருகின்றன. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஓடைகளில் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கன மழை காரணமாக, காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கு புதுத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வரும் கர்நாடகா தண்ணீரில், காரத்தன்மை அதிகமாக உள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதால் இவ்வாறு காரத்தன்மை அதிகரித்துள்ளது.
புதிதாக வரும் தண்ணீரில் காரத்தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருக்கும் மீன்கள், ஓடை வழியாக வெளியேற தொடங்கியுள்ளன. பாலமலை ஓடையிலிருந்து மழைக்காலங்களில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும். அந்த ஓடையில் இப்போது மேட்டூர் அணை மீன்கள் எதிர்நீச்சல் போட்டு செல்லத் தொடங்கியுள்ளன.
லட்சக்கணக்கான மீன்கள் இப்படி ஓடையில் படையெடுத்து செல்வதால், சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் ஓடையில் மீன் பிடிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பாலமலை கோடையில் நான்கு டன்கள் வெவ்வேறு வகை மீன்கள் பிடிபட்டுள்ளன.





மேலும்
-
எல்லாம் அமலாக்கத்துறை படுத்தும் பாடு; முதல்வர் டில்லி பயணம் பற்றி விஜய் விமர்சனம்
-
தேசியக்கொடி ஏந்தி வெற்றி யாத்திரை
-
பொறுப்பற்ற நடத்தை: கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாபை நீக்கினார் லாலு
-
குஜராத் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை இடைத்தேர்தல்: தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
-
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்
-
சென்னை இளம் வீரர்கள் அபாரம்; மளமளவென ரன்கள் குவிப்பு