தேசியக்கொடி ஏந்தி வெற்றி யாத்திரை

1

கோவை: கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், பா.ஜ.,வினர் தேசியக்கொடி ஏந்தி வெற்றி யாத்திரை நடத்தினர். இந்த யாத்திரையில் பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி. கே. நாகராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:



இன்று நாம் பாதுகாப்போடு பத்திரமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம் இந்திய ராணுவம். ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, போரை நிறுத்துங்கள் என்று பாகிஸ்தானின் கெஞ்சல் உலக நாடுகளுக்கு கேட்டாலும் இந்தியாவில் சிலர் கேட்டும், கேட்காதது போல் உள்ளனர்.

இந்தியாவின் வெற்றியை, வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அறுபது ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும்,அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இல்லை.
பாரத நாடு பலம் பொருந்திய நாடு என்பதை உலகம் உணர்ந்துவிட்டது.பிரம்மோஸ் ஏவுகணை நம் சுயசார்பை நிரூபித்துவிட்டது.

மதச்சார்பற்ற என்ற வார்த்தை மூலம் இந்திய கலாசாரத்தை, பண்பாட்டை கொச்சைப்படுத்தும் ஓட்டு வங்கி அரசியல்வாதிகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவோம். இந்தியா, இந்தியர், பாரதம் என்று பெருமையோடு சொல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement