கேரளாவில் கொட்டும் கனமழை: 7 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் நாளை விடுமுறை

திருவனந்தபுரம்;கேரளாவில் கனமழை அறிவிப்பை அடுத்து, நாளை (மே 26) 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
@1brகேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இம்முறை 16 ஆண்டுகள் கழித்து, முன் கூட்டியே நேற்று பருவமழை தொடங்கி இருக்கிறது.
16 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை ஆரம்பித்து இருக்க, கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
தொடர் மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இந் நிலையில், அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால் கேரளாவில் 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (மே 26) விடுமுறை விடப்பட்டு உள்ளது.
அதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டு உள்ளனர். நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ள மாவட்டங்களின் விவரம் வருமாறு;
காசர்கோடு
கண்ணூர்
வயநாடு
கோழிக்கோடு
திருச்சூர்
எர்ணாகுளம்
இடுக்கி
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement