பழைய பஸ் நிலைய கட்டடங்கள் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்

விழுப்புரம் : விழுப்புரம் பழைய பஸ் நிலைய பயணிகள் நிழற்குடை கட்டடங்கள் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்த, பழுதான கட்டடங்கள் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இடித்து அகற்றி புதுப்பிக்கப்பட்டது. பயணிகள் காத்திருக்கும் புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. பயணிகள் காத்திருக்கும் வளாக கட்டடம் பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது.

கட்டடத்தின் வெளிப்புற சுவர்கள் முழுதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தின் அண்ணா பழைய பஸ் நிலையம் என்ற பெயரை கூட போஸ்டர்கள் ஓட்டி மறைத்து விட்டனர்.

பயணிகள் அமரும் உள்பகுதி சுவர்களிலும், விளம்பர போஸ்டர்கள், கட்சி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

பயணிகள் அமரும் பகுதிகளில் மாடுகள், நாய்கள் முகாமிட்டுள்ளதால், கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

பஸ் நிலைய கட்டடங்களை பராமரிக்காமல் வீணாகி வருவதால், பயணிகள் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement