நீஞ்சல் மதகு கால்வாயை துார்வாரி சீரமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, 60 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், நீஞ்சல் மதகு கால்வாய் வழியாக குருவன்மேடு, ரெட்டிபாளையம், திம்மாவரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, செங்கல்பட்டு அருகில் பாலாற்றில் கலக்கிறது.

இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் செடிகள் நிறைந்தும், சீமை கருவேல மரங்கள் அடர்ந்தும் காணப்படுகிறது.

இதன் காரணமாக, மழைக்காலங்களில் வெள்ள நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுவதுடன், விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

எனவே, நீஞ்சல் மதகு கால்வாயை துார் வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement