மண்புழு உரக்கொட்டகை வீண் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

மேல்நல்லாத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில், கடந்த 2016 - 17ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.

இதிலிருந்து மட்கும் மற்றும் மட்காத குப்பை என, தரம் பிரிக்கப்பட்டு, மண்புழு இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, கிராம சேவை மையம் அருகே உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.

இந்த கொட்டகை அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. மேலும், உரக்கொட்டகை சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இது, இப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் ஆய்வு செய்து, மண்புழு உரக்கொட்டகையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement