மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு

திருத்தணி:ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், 15. இவர், அதே பகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுதினார்.

திருமுருகன், திருத்தணி அடுத்த நாபளூர் கிராமத்தில் உள்ள உறவினர் ஜெயபிரதா வீட்டிற்கு விடுமுறைக்காக கடந்த 14ம் தேதி வந்தார். அன்று மாலை வீட்டின் கூரை மீது இருந்த புறாவை பிடிக்க முயன்ற போது, வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் விழுந்து, மின்சாரம் பாய்ந்து பலத்த தீக்காயம் அடைந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement