பைக் - லாரி மோதியதில் தாய் கண்முன் மகள் பலி
கோவில்பட்டி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பரமசிவம். இவரது வீட்டிற்கு, டி.கல்லுப்பட்டியை சேர்ந்த உறவினர் ஜெயபாண்டி மனைவி வெண்ணிலா, 35, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா, 10, ஆசினியா, 7, ஆகியோர் வந்திருந்தனர்.
அவர்களை ஊருக்கு அனுப்புவதற்காக, நேற்று காலை பரமசிவம், தன் பைக்கில் அழைத்துச் சென்றார். பசுவந்தனை சாலையில், பின்னால் வந்த டேங்கர் லாரி, பைக் மீது மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி ஏஞ்சல் ஆராதியா தலை நசுங்கி இறந்தார். பரமசிவம், வெண்ணிலா, சிறுமி ஆசினியா படுகாயமடைந்தனர்.
கோவில்பட்டி மேற்கு போலீசார், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, டேங்கர் லாரி டிரைவர் சிவந்திபட்டியை சேர்ந்த ஆறுமுகசாமியை கைது செய்தனர்.
காயமடைந்தோரை மீட்க, தகவல் தெரிவித்து அரை மணி நேரத்திற்கும் மேலாகியும், 108 ஆம்புலன்ஸ் வராததால், தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில், போலீசார் அனுப்பினர்.
மேலும்
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு