தடைக்காலம் எதிரொலி காசிமேட்டில் மீன்விலை உயர்வு

காசிமேடு:மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கடலில் மீன்பிடிப்பதற்கான, 61 நாட்கள் தடைக்காலம், ஏப்., 15ம் தேதி துவங்கியது. ஜூன் 14 வரை அமலில் உள்ளது.
இந்த தடை காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் ஓய்வெடுக்கின்றன.
அதேநேரம், 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பயன்படுத்தி, கரையோரமாக மீன் பிடித்து வந்து விற்பனை நடக்கிறது. பழவேற்காடு மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.
நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், காசிமேட்டில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலை கடுமையாக உயர்ந்தது. மீன்விலை உயர்வால், மீன் பிரியர்கள் கவலையடைந்தனர்.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1400 - 1500
சூரை 200 - 300
பாறை 300 - 500
கொடுவா 600 - 800
சங்கரா 500 - 700
பர்லா 300 - 350
கலவா 600 - 700
நெத்திலி 200 - 350
கடல் விரால் 500 - 700
மத்தி 200 - 300
இறால் 300 - 500
நண்டு 300 - 700
மேலும்
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
-
பா.ஜ., தலைவரை சந்தித்த நிர்வாகிகள்; கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,வில் சலசலப்பு