குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் இருந்து பள்ளத்தெருவிற்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் இருந்து பள்ளத்தெருவிற்கு செல்லும் தார்சாலை உள்ளது.இந்த சாலை தற்போது பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சிறிது நேரம் மழை பெய்தாலும் கூட மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இனியாவது சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement