ராணுவ வீரர்களை பாராட்டி தேசியக்கொடி பேரணி

கிருஷ்ணகிரி: காஷ்மீர் பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, நம் ராணுவ வீரர்கள் நடத்திய, 'ஆபரேஷன் சிந்துார்' நடடிக்கையால் பாகிஸ்-தானில் இருந்த, 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்-திய ராணுவத்தின் இச்செயலை பாராட்டி, நாடு முழுவதும் தேசி-யக்கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில் நேற்று தேசியக்கொடியுடன் ராணுவத்-திற்கு பாராட்டு தெரிவிக்கும் பேரணி நடந்தது. இதில், தேசிய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் முனவரி பேகம், மாநில செயற்-குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், மாவட்ட பொதுச் செயலா-ளர்கள் ராஜேந்திரன், முருகன், மண்டல் தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் ராமன், துணைத்தலைவர் கார்த்திகேயன், மண்டல் தலைவி விமலா, கவுன்சிலர் சங்கர், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள், வீரமங்கையர் நலச்சங்கத்தின் செயலாளர் கேப்டன் திருப்பதி, தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் தேவராஜ், பொருளாளர் சென்றாயன் உள்பட பலர் பங்-கேற்றனர்.
* மத்துாரில், பா.ஜ., சார்பில், மத்துார் மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நேற்று நடந்தது. அதேபோல் போச்சம்பள்ளியில், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில், 150க்கும் மேற்பட்ட, பா.ஜ.,வினர், தர்மபுரி- திருப்பத்துார் மாநில நெடுஞ்சாலையில், போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் எதிரில் இருந்து, பாளே-தோட்டம் பிரிவு சாலை வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஊத்தங்கரையில், பா.ஜ., தேசியக்கொடி ஏந்தி பேரணி நடந்-தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார்.

Advertisement