அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு ஊக்கத்தொகை

கிருஷ்ணகிரி: பர்கூர் சட்டசபை தொகுதியில், அரசு பள்ளியில் படித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி திவ்யா, 600க்கு, 561 மதிப்-பெண்கள் பெற்றார்.

அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி காவியா, 500க்கு, 496 மதிப்பெண்களும், மோனிகா, 495 மதிப்பெண்களும் பெற்றனர். அவர்களை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் உயர்கல்வியிலும் அதிக மதிப்பெண் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்க்க வாழ்த்தினார்

Advertisement