ரூ.1.26 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி குளித்தலை எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த சூரியனுார் பஞ்., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்-பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் நிதியின் கீழ், 6.05 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை கட்டடம்; நங்கவரம் டவுன் பஞ்., குறிச்சியில் நபார்டு திட்டத்தின் கீழ், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, இரண்டு வகுப்பறை கட்டடம்; அம்-பேத்கர் நகரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலை, நச்சலுார் புதுப்பாளையத்தில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடம் மற்றும் வாரிகரையில் கட்டப்பட்ட படித்துறையை குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்து வைத்தார். மேலும், கோவிந்த-னுாரில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.


குளித்தலை ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணை தலைவர் தேன்மொழி, நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணை தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன், கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement