சாலையில் மண் அரிப்பு; தடுப்பு சுவர் தேவை
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார்-மேட்டு மருதுார் நெடுஞ்சாலையில் இருபுறமும் விவசாயிகள் ஆக்கி-ரமிப்பு செய்து வருகின்றனர். மேலும், சாலையோரம் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால் செல்வதால், மண் அரிப்பு ஏற்-பட்டு சாலை சேதமடைந்து வருகிறது.
இந்த சாலையில் அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்கள், கன-ரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், விவசாயிகள், விளை பொருட்களை டிராக்டர், லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் சாலை தொடர்ந்து சரியும் நிலை உள்ளது. அதனால், மண் அரிப்பை கட்டுப்படுத்த தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement