சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவித்தது ஆணையம்

புதுடில்லி : நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் காடி, விசாவதர்; கேரள மாநிலம் நிலம்பூர்; பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு; மே.வங்கத்தில் கலிகஞ்ச் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தொகுதிகளுக்கு ஜூன் 19ல் ஓட்டுப்பதிவு நடக்கும். இத்தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. வேட்பு மனு தாக்கல் இன்று (மே 26ல்) துவங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 2. மனு மீதான பரிசீலனை ஜூன் 3ல் நடக்கிறது.

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 5. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement