மது, போதைப்பொருள் புகார் மொபைல் எண் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தன்புகைப்பட அமைப்பினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு அமைப்பு போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார் அளிக்க, 90800 34763 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில், 'டிரக் பிரீ கள்ளக்குறிச்சி' என்ற குரூப் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று மாநில அளவில் புகார் அளிக்க, 10581 என்ற கட்டணமில்லா எண்ணும், 94981 10581 என்ற தொலைபேசி எண்ணும் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருள்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 90800 34763 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். டி.ஆர்.ஓ., ஜீவா, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement