ஜூன் 2ம் தேதி திறக்கப்படுவதால் அரசுப்பள்ளிகளில் துாய்மை பணி

ஈரோடு, பள்ளிகள் ஜூன், 2ல் திறக்கப்படவுள்ளதால், அரசு பள்ளிகளில் வளாகத்தை துாய்மையாகவும், கழிவறைகளை சுத்தமாகவும் வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பள்ளிகளில், துாய்மை மற்றும் சுகாதார பணிகளை, தலைமை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் துாய்மைப்பணி நேற்று துவங்கியது. இதேபோல் வளையக்கார வீதி நடுநிலை பள்ளி, பெரியார் வீதி அரசு துவக்க பள்ளி, கச்சேரி வீதி மாநகராட்சி துவக்க பள்ளிகளில் துாய்மை பணி, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. சில பள்ளிகளில் கற்றல் திறன் மேம்பாட்டு கருவிகளை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த பகுதி துாய்மை பணியாளர்களை கொண்டு பிற மாநகராட்சி பள்ளிகளில் துாய்மை பணி நடந்தது.

Advertisement