போலீஸ் வீட்டில் நகை திருட்டு

திருச்சி:திருச்சியில், ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் யுவராணி. கே.கே.நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் வெளியே சென்ற போது, வீட்டை பூட்டி, காலணி ஸ்டாண்டில் சாவியை வைத்து சென்றுள்ளார்.

மீண்டும் யுவராணி வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த நான்கு சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இதுகுறித்த புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் குடியிருப்பில் புகுந்து, மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement