எஸ்.எஸ்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நாளை திறப்பு விழா
ஈரோடு, ஈரோடு அருகே திண்டல் யூ.ஆர்.சி.நகரில், எஸ்.பி.ஐ., வங்கி எதிரில், எஸ்.எஸ்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நாளை நடக்கிறது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் சிறப்பு விருந்தினர்களாகவும், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்.பி., பிரகாஷ் ஆகியோர் கவுரவ விருந்தினர் களாக கலந்து கொள்கின்றனர்.
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மேயர் நாகரத்தினம், திருச்சி ஐ.ஜி., காமினி, ஈரோடு எஸ்.பி., சுஜாதா முன்னிலை வகிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் சரவணபவன், நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சித், மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வகுமார் செய்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனை, 150 படுக்கை வசதி, நான்கு
ஆபரேஷன் தியேட்டர், 3-டி மற்றும் ஏ.ஐ.., வசதியுடன் கேத் லேப், 30 நவீன ஐ.சி.யு.படுக்கை வசதிகளுடன், 24 மணி நேரமும் செயல்படும்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை, மயக்க மருந்து, இருதய மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் அழகு சாதனவியல், நுரையீரல் மற்றும் தலை மற்றும் கழுத்து சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, இரைப்பை குடல் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல், கண் மருத்துவம், குழந்தை மருத்துவ மருந்தகம், பிசியோதெரபி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம், கதிரியக்கவியல், சிறுநீரகம் உள்ளிட்ட
பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்
-
குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு நெல் குவின்டாலுக்கு ரூ.69 உயர்வு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
-
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
-
லஞ்ச வழக்கில் சிக்கியோருக்கு அரசு அதிகாரிகள் மறைமுக உதவி: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி
-
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சிறப்பு கோர்ட் தீர்ப்பு..
-
டிரான்ஸ்பர் தவிர்க்க ரூ.6 லட்சம் கட்டணம்; பொறியாளர்கள் புகாரால் திடீர் சலசலப்பு