அந்தியூர் தி.மு.க., ஒன்றியம் 3 ஆக பிரிப்பு
அந்தியூர், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தற்போதுள்ள அந்தியூர் ஒன்றியம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பர்கூர் பஞ்., வடக்கு ஒன்றியமாகவும், சின்னத்தம்பிபாளையம், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், சங்கராப்பாளையம், பச்சாம்பாளையம், நகலுார் பஞ்சாயத்துக்கள், அந்தியூர் மத்திய ஒன்றியமாகவும்
இருக்கும். பிரம்மதேசம், குப்பாண்டாம்பாளையம், கூத்தம்பூண்டி, கீழ்வானி, மூங்கில்பட்டி, வேம்பத்தி பஞ்.,கள் தெற்கு ஒன்றியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அந்தியூர் மத்திய ஒன்றியத்துக்கு எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தெற்கு ஒன்றியத்துக்கு நாகேஸ்வரன், வடக்கு ஒன்றியத்துக்கு ராமதாஸ் ஒன்றிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொமராயனுார், சென்னம்பட்டி, மாத்துார், புதுார், வெள்ளித்திருப்பூர் பஞ்.,கள், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியமாக பிரிக்கப்பட்டு, சரவணன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
-
ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி
-
கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்
-
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
-
பிரதமரின் உதவித்தொகை; 2 லட்சம் விவசாயிகள் ஏக்கம்
-
நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்