பாதியிலேயே ரயில் நிறுத்தம் பயணியர் ஸ்டேஷன் முற்றுகை
கரூர்:திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை, பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்தன. இதனால் நேற்று காலை, 8:10 மணிக்கு புறப்பட்ட ஈரோடு - திருச்சி பயணியர் ரயில் கரூரில், 10:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதனால் ஈரோட்டில் இருந்து, திருச்சிக்கு வந்த, 50க்கும் மேற்பட்ட பயணியர், கரூரில் இறக்கி விடப்பட்டனர். ஆத்திரமடைந்த பயணியர், ஸ்டேஷன் மாஸ்டர் அறையை முற்றுகையிட்டனர்.
பயணியர் கூறுகையில், 'திருச்சிக்கு டிக்கெட் வாங்கும் போது, ரயில் திருச்சி செல்லாது என, ஊழியர்கள் சொல்லவில்லை. கரூர் வந்த பின்தான், ரயில் திருச்சி செல்லாது என தெரிய வந்தது. ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்தான் இந்த குளறுபடிக்கு காரணம்' என்றனர். பின்னர், பாலக்காட்டில் இருந்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம், 12:45 மணிக்கு வந்த ரயிலில் பயணியர் திருச்சிக்கு புறப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,
-
த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
-
எதிர்க்கட்சிகள் ஓரணியில் செயல்படவில்லை: அ.தி.மு.க.,வை உஷார்படுத்தும் திருமா
-
ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,
-
தமிழக கிராமங்கள்தோறும் ஊர் திருவிழா: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து பிரசாரம்
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மத்திய அரசு முடிவு
Advertisement
Advertisement