ராசிபுரம் ஜமாபந்தியில் 977 மனுக்கள் பதிவு



ராசிபுரம், ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வெண்ணந்துார் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.


நேற்று மட்டும், 315 மனுக்கள் பெறப்பட்டன. இதில், இணையவழி பட்டா மாறுதல் - 1 மற்றும் நத்தம் பட்டா மாறுதல், 6 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு மனுதாரருக்கு பட்டா நகல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம், 977 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.

Advertisement