6வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 155 மனுக்கள்


கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 16ல், ஜமாபந்தி துவங்கி நடக்கிறது. கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த, 16, 20, 21, 22 மற்றும் 23ம் தேதியில் நடந்த ஜமாபந்தியில் வேப்பனஹள்ளி, ஆலப்பட்டி, குருபரப்பள்ளி மற்றும் பெரியமுத்துார் உள்வட்டங்களுக்கு உட்பட்ட, 95 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.

6வது நாளான நேற்று, பெரியமுத்துார் உள்வட்டத்திற்கு உட்பட்ட சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஹள்ளி, பெரியமுத்துார், தட்ரஹள்ளி மற்றும் கத்தேரி உள்ளிட்ட, 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், புதிய ரேஷன் அட்டை, என மொத்தம், 155 மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தகுதியான மனுக்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உதவி இயக்குனர் (நில அளவை) ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, தனி தாசில்தார்கள் இளங்கோ, வடிவேல், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement