வயல் விழா பயிற்சி

ஓசூர்,ஓசூர், வட்டார வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில், கூஸ்தனப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு வயல் விழா பயிற்சி நடந்தது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் சூடோமோனாஸ் பயன்கள் பற்றி எடுத்துரைத்தார். அதியமான் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் பரத்குமார்,

மண் மாதிரி சேகரிக்கும் முறை, ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்து விளக்கி கூறினார்.ஓசூர் வேளாண் அலுவலர் ரேணுகா, துணை வேளாண் அலுவலர் முருகேசன், சொட்டு நீர் பாசனம், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் முறைகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நல்லுார் உதவி வேளாண் அலுவலர் ஆறுமுகம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் காவியா, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement