ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு


ராயக்கோட்டை ராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டி ஏரியில், மூதாட்டி சடலம் மிதப்பதாக, ராயக்கோட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு விசாரித்த போது,
ராயக்கோட்டை அருகே, துார்வாசனுாரை சேர்ந்த வேடியப்பன் மனைவி முனியம்மாள், 75, என்பதும், ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement