தீயில் எரிந்து மின்மாற்றி நாசம்

திருமழிசை:திருமழிசை உடையவர் கோவில் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை சுற்றி, குப்பை குவிந்து இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:45 மணியளவில், திடீரென மின் கசிவால் குப்பையில் தீப்பிடித்தது. பின், தீ மளமளவென பரவியதில், மின்மாற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.

தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர். பின், பகுதிவாசிகள் உதவியுடன், மின்வாரிய ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisement