பாரதியார் ைஹடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சாதனை



ஆத்துார் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆத்துார் பாரதியார் ைஹடெக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ரித்திகா, 500க்கு, 488 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். இவர் இயற்பியல், வேதியியலில் தலா, 100 மதிப்பெண் பெற்றார். மாணவர் விக்னேஷ்வரா, 476, மாணவி ஐஸ்வர்யா, 454, மாணவி கிரினிகா, 452 மதிப்பெண்கள் பெற்று முறையே, 2, 3, 4ம் இடங்களை பெற்றனர். 450க்கு மேல், 4 பேர், 400க்கு மேல், 28 பேர், 350க்கு மேல், 51 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி மாணவி கோவர்தனி, 500க்கு, 496 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இவர், கணிதம், தகவல் தொழில்நுட்ப பாடத்தில் தலா, 100 மதிப்பெண் பெற்றார். மாணவி ரித்விகா, 495, மாணவர் மணீஷ், 492, மாணவி சிவானி, 491 மதிப்பெண் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். கணிதத்தில் ஒருவர், தமிழ், தகவல் தொழில்நுட்பத்தில் தலா, 4 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 450க்கு மேல், 21 பேர், 400க்கு மேல், 38 பேர், 350க்கு மேல், 54 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவ, மாணவியரை, பள்ளி தலைவர் இளவரசு, செயலர் ராமசாமி, பொருளாளர் செல்வமணி, இயக்குனர்கள் செந்தில்குமார், பாலகுமார், சந்திரசேகரன், பெரியசாமி, முதல்வர் அஸ்வினி பிரியா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement