உளி கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்



கம்பைநல்லுார், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், 24, நேற்று காலை, 7:00 மணிக்கு, கம்பைநல்லுார்-அரூர் சாலையில், சேக்காண்டஹள்ளி பஸ் நிறுத்தம் அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி, 2 யூனிட் உளி கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. மேலும், லாரியை கம்பைநல்லுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வர முற்பட்ட போது டிரைவர் தப்பியோடி விட்டார். தொடர்ந்து, புவனமாணிக்கம் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். கம்பைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement