ஆடு திருடிய 3 பேர் கைது



பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தேவராஜபாளையம், கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 35. ஆடு வியாபாரி. கடந்த, 18ல் இவரது வீட்டின் ஆடு கொட்டாயில் இருந்த ஆடு ஒன்றை மர்மநபர்கள் காரில் துாக்கி போட்டு கொண்டு தப்பினர்.

குப்புசாமி பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., சக்திவேல், மணி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி, தர்மபுரி அடுத்த குரும்பட்டியை சேர்ந்த ராகுல், 22, வல்லரசு, 22, வசந்தன், 25 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி கறி கடைகளில் விற்றது தெரியவந்தது.

Advertisement