காட்டுப்பன்றிகளால் சேதமான பயிர்கள்

அரூர், அரூர் அடுத்த நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, கீழானுார், வாச்சாத்தி, கூக்கடப்பட்டி, மருதிப்பட்டி, சிங்கிரிப்பட்டி, மோட்டூர், காந்தி நகர், பள்ளிப்பட்டி, சுண்டகாப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களில் மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன.

மற்ற விலங்குகளை விட காட்டு பன்றிகளால் பாதிப்பு அதிகமாக உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை, பருத்தி மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடிகளை அதிகளவில், நாசம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement