கொடையில் சூறாவளி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசியதால், நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகள் மின்தடையால் மூன்று நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன.

தொலைத்தொடர்பு சேவை பாதித்து தீவு போல் மாறி உள்ளது. மன்னவனுார் வெட்டுவரை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவியது. காற்றின் வேகம் அதிகரித்ததால், தமிழ்நாடு சுற்றுலாத்துறை படகு குழாமில் ஒரு யூனிட்டில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

Advertisement