ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க மனு

அரவக்குறிச்சி ;அரவக்குறிச்சி, கிழக்கு தெருவில் உள்ள மயானத்திற்கு சென்று வர, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர, ஆர்.டி.ஓ.,விடம் மக்கள் மனு அளித்தனர்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், நேற்று நடந்த ஜமாபந்தியில் முன்னாள் கவுன்சிலர்கள் மனோகரன், ஜோதிரத்தினம் ஆகியோர், ஆர்.டி.ஓ., முகமது பைசூலிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் மயானம் அமைந்துள்ளது.


இங்கு பல தரப்பட்ட மக்கள் இறந்த உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். மயானத்துக்கு செல்வதென்றால், நங்காஞ்சி ஆற்றில் இறங்கி செல்ல வேண்டும். ஆனால் ஆற்றில் சேறும், சகதியுமாக கழிவுநீர் செல்வதால் இறங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே மயானம் செல்வதற்கு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தாசில்தார் மகேந்திரன் உடனிருந்தார்.

Advertisement