மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்
திருப்புவனம் : திருப்புவனத்தில் வட்டார அளவிலான ஜமாபந்தி நடந்து வருகிறது.மக்களின் மனுக்கள் மீது தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்துறையினர் விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர். ஏனாதியைச் சேர்ந்த ஆனைக்கரன், இவரது தாயார் சின்னம்மாள் நத்தம் புறம்போக்கில் வசித்து வருகின்றனர். வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்ததை அடுத்து 2023ல் பட்டா வழங்கப்பட்டது.
கணினி பட்டா வழங்கப்படவில்லை. கணினி பட்டா வழங்கினால் தான் உரிய அனுமதிக்கு விண்ணப்பித்து வீடு கட்ட முடியும். இதனை கண்டித்து நேற்று ஆனைக்கரன் கணினி பட்டா வழங்க கோரி இதுவரை வழங்கிய மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து ஜமாபந்தியில் மனு கொடுத்தார்.
வருவாய்துறையினர் கூறுகையில்: இலவச வீட்டு மனையை பத்து வருடங்களுக்குள் விற்பனை செய்ய கூடாது. எனவே பத்து வருடங்களுக்கு கணினி வழி பட்டா வழங்கப்படாது. எனவே பட்டா வழங்கப்படவில்லை, இது குறித்து அவரிடம் தெளிவுபடுத்தியும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார், என்றனர்.
மேலும்
-
நான் காரைக்குடி நாராயணன்..
-
துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
-
போனில் பாதுகாப்பு தொடர்பான தகவல்: ஹிமாச்சல் இளைஞர் கைது
-
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
பாகிஸ்தானுக்கு உளவு வேலை; காங்கிரஸ் மாஜி அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது