இந்தியா- அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு; விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வாஷிங்டனில் அமெரிக்க துணை செயலாளர் ஜெப்ரி கெஸ்லரை சந்தித்தார், அப்போது ராணுவம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மே 27 முதல் 29 வரை மூன்று நாள் அமெரிக்கா பயணமாக வாஷிங்டன், டிசிக்கு சென்றார். அங்கு அவர் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் கூறியதாவது:
இந்தியா-அமெரிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய சவால்களில் கூட்டு ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல், துரிதப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.
இவ்வாறு இந்திய துாதரகம் கூறியுள்ளது.

மேலும்
-
சென்னையில் இண்டர்நேஷனல் ஷாப்பிங் பெஸ்டிவல்..
-
மக்கள் மீது இரக்கமில்லாத திரிணமுல் அரசு: பிரதமர் மோடி விமர்சனத்தால் மம்தா அதிருப்தி
-
உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை ஏற்பு
-
கீழடி விவகாரம்: மத்திய அரசு விளக்கம்
-
மாவோயிஸ்ட் தலைவன் ஒடிசாவில் கைது: ஏ.கே.-47 ரக துப்பாக்கி பறிமுதல்
-
நான் காரைக்குடி நாராயணன்..