தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு: இன்றைய நிலவரம் இதோ!

1


சென்னை: சென்னையில் இன்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 27) தங்கம் கிராம், 8,995 ரூபாய்க்கும், சவரன், 71,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 28), தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் குறைந்து, 8,935 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் சரிவடைந்து, 71,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisement