ஓ.சி.எப்., கிரிக்கெட் போட்டி ரைசிங் ஜவான்ஸ் சி.ஏ., வெற்றி
சென்னை, மே 31-
லிட்டில் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், 'ஓ.சி.எப்., யு - 13' எனும் தலைப்பில், 13 வயதிற்கு உட்பட்ட அகாடமி அணி சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, ஆவடியில் நடந்து வருகிறது.
போட்டியில், லிட்டில் ஸ்டார்ஸ், எஸ்.பி.ஆர்., - சி.ஏ., - யுனிவர்சல், யார்க்கர், பைன் ஸ்டார், ரைசிங் ஜவான்ஸ், ஆல்பிரட் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
அணிகளை இரு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் தலா ஐந்து அணிகள் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் மாலை நடந்த லீக் ஆட்டத்தில், ரைசிங் ஜவான்ஸ் சி.ஏ., அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 198 ரன்கள் அடித்தது.
அபாரமாக விளையாடிய அணியின் வீரர்கள் ஜெய் கவின் 50 ரன்களும், சுஜேஷ் 49 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த, பைன் ஸ்டார் அணி, 30 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஒன்பது விக்கெட் இழப்பிற்கு, 131 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நேற்று காலை நடந்த மற்றொரு ஆட்டத்தில், லிட்டில் ஸ்டார்ஸ் அணி 30 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 175 ரன்கள் அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, யுனிவர்சல் சி.ஏ., அணி, 29.1 ஓவர்களில், 169 ரன்கள் மட்டுமே அடித்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
நேற்று மதியம் நடக்க இருந்த யார்க்கர் மற்றும் எஸ்.பி.ஆர்., அணிகளுக்கு இடையிலான ஆட்டம், மழையால் பாதிக்கப்பட்டது.
மேலும்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு